அனிமேஷன் பொம்மைகளைப் போல செல்பி எடுக்க கூகுளின் புதிய செயலி..!!!

0
4

கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை ஸ்மார்ட் போனில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றது. கூகுள் நிறுவனத்தின் புதிய செயலிகள் மற்றும் அப்டேட் வெர்சன்கள் நாம் ஸ்மார்ட் போன்களில் இல்லை என்றால் நாம் நாகரீகத்தில் பின்தங்கிவிட்டோமோ என எண்ணும் அளவிற்கு, தற்போது தொழில்நுட்ப ரீதியாக கூகுள் நிறுவனத்தின் படைப்புக்கு வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், கூகுள் நிறுவனம் தற்போது செல்பி புகைப்படங்களுக்குப் பயன்படும் வகையில் ஒரு செயலியை  அறிமுகம் செய்துள்ளது. இதன்படி நீங்கள் இதில் செல்பி எடுத்தால் அதை எளிதாக ஸ்டிக்கர் அல்லது அனிமேஷன் பொம்மை போல மாற்ற முடியும்.

செல்பி மோகம்

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் செல்பி எடுப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர்களாக இருக்கின்றனர். அவர்களின் எண்ணங்களும் தனிப்பட்ட விருப்பங்களும் தான் செல்பிக்கு முக்கியத்துவம் தருவதாக இருக்கின்றது. செல்பி எனப்படும் சுய புகைப்படம் சமுதாயத்தில் இளைஞர்கள் மத்தியில் தனி மதிப்பைப் பெற்றுள்ளது.

செல்பியை அழகூட்ட கூகுள் செயலி

செல்பி எடுத்தாலும், எடிட்டிங் வேலைபாடுகளையும் இளைஞர்கள் தனி கவனம் செலுத்தி செய்து அசத்துகின்றனர். அதில் ஸ்டிக்கர்களையும், எமோஜீக்களையும் சேர்த்துத் தங்களது சுய புகைப்படத்தை மேலும் அழகூட்டி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

தற்போது கூகுள் நிறுவனம் செல்பி புகைப்படம் எடுத்தால், அதில் எடிட்டிங் வேலைபாடுகளும் இருக்கும் வகையில், ஜிபோர்டு (G-board) என்னும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. ( கூகுளின் இந்தப் புதிய செயலியைப் பெற இங்கே சொடுக்கவும்.) ஜி போர்டு விசைப்பலகை செயலியை ஐஒஎஸ் (ios), ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்குப் பயன்படும் வகையில் தற்போது உருவாக்கியுள்ளது.

புதிய வசதியில் என்ன செய்ய முடியும்

நாம் செல்பி எடுத்த பிறகு அதில் எடிட்டிங் செய்யும் விதமாக கூகுள் ஜிபோர்டு  செயலியை உருவாக்கியுள்ளது. இதில் எமோஜீகளையும், ஸ்டிக்கர்களையும் புகுத்திக்கொள்ளலாம். மேலும், இதில் தோல் நிறம், கூந்தல் நிறம், கண்களின் நிறம் உள்ளிட்டவைகளை மாற்றிக் கொள்ளலாம்.

 

 

100 ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும்

தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஜிபோர்ட்டைப் பயன்படுத்தி புதிய தொழில் நுட்பத்தில் செல்பிகளை உருவாக்க முடியும். இதில் தானாகவே புகைப்படங்களை அனிமேஷன் உருவங்களாக மாற்றிக் கொள்ளவும் முடியும் . மேலும், இதில் 100 ஸ்டிக்கர்கள் தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி நமது எண்ணங்களுக்கு ஏற்றார் போல் ஸ்டிக்கர்களை பிறருக்கு அனுப்பலாம்.

இந்த ஜி போர்ட் விசைப்பலகையில் தமிழிலும் தட்டச்சு செய்ய முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.