கைபேசி தொலைந்து விட்டதா? கூகுள் மேப் மூலம் கண்டுபிடிக்கலாம் !

0
11
Someone forgot cell phone on a bench in the park

இப்போதெல்லாம் கைபேசி நம் உடலின் ஒரு அங்கம் போல ஆகி விட்டது. கைபேசி இல்லாமல் வெளியே சென்றால், ஏதோ ஒன்றை இழந்த உணர்வு அனைவருக்கும் வருகிறது. நீங்கள் கையிலேயே வைத்திருக்கும் உங்கள் கைபேசி திடீரென உங்களிடம் இல்லையென்றால்? இது போன்ற அனுபவம் நினைக்கவே கடினமானதாக இருக்கும். ஒருவேளை அது தொலைந்து போயிருந்தால்? அல்லது அதை எங்காவது தவறுதலாக வைத்திருந்தால் ? அதில் இருக்கும் டேட்டா, தொடர்பு எண்கள் மற்றும் புகைப்படங்களின் நிலை என்னவாகும் ?

உங்களின் மூளை கடைசியாக கைபேசியை எங்கே வைத்தோம் என்ற எண்ணத்தை நினைவுப்படுத்தும். இனி உங்களது கைபேசியை நீங்கள் வைத்த இடம் நினைவுக்கு வரலாம் அல்லது அதனை நல்ல உள்ளம் கொண்டவர் எடுத்துக் கொண்டு உடனடியாக உங்களுக்கு அதனை வழங்கலாம். எனினும், சில சமயங்களில் அது கிடைக்காமல் போகவும் வாய்ப்புகள் அதிகம் தான்.

இதுபோன்ற சூழ்நிலைகளில் கை கொடுக்கும் வகையில், ஆப்பிள் இயங்குதளங்களில் ஃபைன்ட் மை போன் ( Apple Find My Phone) என்ற அம்சமும், ஆன்ட்ராய்டு தளத்தில் ஃபைன்ட் யுவர் போன் (Find Your Phone) என்ற அம்சமும் இருக்கின்றன. இந்த அம்சம் நீங்கள் கைபேசியுடன் சென்று வந்த இடங்கள் அனைத்தையும் டிராக் செய்து வைத்திருக்கும். கூகுள் மேப்ஸ் (Google Maps) மூலம் நீங்கள் தவறவிட்ட கைபேசியை டைம்லைன் மூலம் டிராக் செய்ய முடியும்.

இதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

இந்த சேவையைப் பயன்படுத்த உங்களிடம் இருக்க வேண்டியவை:

– இன்டர்நெட் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் அல்லது கணினி.

– உங்களது கூகுள் கணக்கின் லாக்-இன் ஐடி மற்றும் பாஸ்வேர்டு.

பின்பற்ற வேண்டியவை:

1. முதலில் ஸ்மார்ட்போன் அல்லது கம்ப்யூட்டரில் www.maps.google.com  வலைத்தள முகவரிக்குச் செல்ல வேண்டும்

2. தவறவிட்ட கைபேசியில் இணைக்கப்பட்டிருந்த கூகுள் கணக்கு மூலம் லாக்-இன் செய்ய வேண்டும்.

3. இனி, வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் மூன்று புள்ளிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

4. அடுத்து ‘Your timeline’ என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

5. இங்கு உங்களது சாதனத்தில் இருக்கும் தகவல்களில், ஆண்டு, மாதம் மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களைப் பதிவிட வேண்டும்

6. தற்போது உங்களது சாதனத்தின் இருப்பிட விவரங்களை கூகுள் மேப்ஸ் தற்போதைய இருப்பிடத்துடன் காண்பிக்கும்

குறிப்பு:

இந்த அம்சம் சீராக வேலை செய்ய, உங்களது கைபேசி மற்றும் அதில் ஜி.பி.எஸ் (GPS) சேவைகள் அணைத்து வைக்கப் படாமல் இருக்க வேண்டும்.