கூகுளில் இப்படியெல்லாம் தேடலாம் – எளிமையான வழிகள்

கூகுளில் நமக்கு வேண்டிய தகவல்களை எளிதாகவும் விரைவாகவும் பெறுவதற்கான வழிகள்!!


136
24 shares, 136 points

நமக்கு எந்த தகவல் வேண்டும் என்றாலும் உடனே நாம் கூகுளிடம் தான் கேட்போம். கூகுளும் சம்பந்தப்பட்ட தகவல்களைக் கொடுக்கும். ஆனால் சில சமயம் கூகுள் நாம் கொடுக்கும் வார்த்தைகளை மட்டுமே கவனிப்பதால் தேவையற்ற தகவல்களை அளிக்கும். இதைத் தவிர்க்க தேடும் முறையில் சில மாற்றங்களை செய்தாலே போதும். நமக்குத் தேவையான தகவல்களை மட்டும் பெற பின்பற்ற வேண்டிய எளிய வழிகளைப் பார்ப்போம்.

Credit: Mangools

 1. மேற்கோள் குறி ” “ – சரியான சொற்றொடரை தேடுவதற்கு மேற்கோள் குறியைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக கால்நடை மருத்துவம் பற்றித் தேட வேண்டும் என்றால் கால்நடை மருத்துவம் என்று தேடினால் கால்நடை, மருத்துவம் என்ற தனித்தனி வார்த்தைகள் உள்ள பக்கங்கள் வரும். அதுவே “கால்நடை மருத்துவம்” என்று தேடினால் கால்நடை மருத்துவம் என்று சேர்ந்து இருக்கும் பக்கங்கள் மட்டும் வரும். இதன் மூலம் நீங்கள் தேவையான விஷயங்களை எளிதில் பெற முடியும்.
 2. OR – watch OR kerchief என டைப் செய்தால் Watch என்ற வார்த்தை மட்டும் இருக்கும் பக்கங்களும் Kerchief என்ற வார்த்தை மட்டும் இருக்கும் பக்கங்களும், Watch Kerchief என்ற இரண்டு வார்த்தைகள் இருக்கும் பக்கங்களையும் காட்டும். OR க்குப் பதிலாக | (vertical bar) குறியீட்டைக் கூட உபயோகிக்கலாம்.
 3. AND – Watch AND Kerchief என டைப் செய்தால் Watch Kerchief என்ற இரண்டு வார்த்தைகள் இருக்கும் பக்கங்களை மட்டும் காட்டும். Watch  மட்டும் இருக்கும் பக்கத்தையோ Kerchief  மட்டும் இருக்கும் பக்கத்தையோ காட்டாது. பொதுவாக கூகுள் நாம் சாதாரணமாக எதையாவது தேடினாலே இப்படி தான் பக்கங்களைக் காட்டும்.
 4. NOT – America NOT Nasa என டைப் செய்தால் America உள்ள பக்கங்களை மட்டும் காட்டும். Nasa என்ற வார்த்தை இருக்கும் பக்கங்களைக் காட்டாது. இதற்கு பதில் – (Minus) என்ற  குறியையும் உபயோகிக்கலாம். AND,OR, NOT போன்றவற்றின் செயல்பாடு லாஜிக் கேட்டுகளில் பயன்படுத்தப்படுவது போலவே இருக்கும். முக்கியமான ஒன்று OR, AND, NOT என்பதை Capital letterல் தான் டைப் செய்ய வேண்டும்.
 5. குறிப்பிட்ட File Type இல் தேடுவதற்கு filetype: என்பதை உபயோகிக்க வேண்டும். உதாரணமாக elephant filetype:pdf எனத் தேடும் போது யானைகளை பற்றிய pdf பக்கங்களைக் காட்டும்.
 6. *  இது ஒரு சொல்லின் முழு வார்த்தை அல்லது முழு வாக்கியம் தெரியவில்லை என்றால் பயன்படுத்தலாம். search ல் friend* என டைப் செய்தால் கூகுள் Friend, Friends, Friendship போன்ற வார்த்தைகளைத் தேடித் தரும்.
 7. ஒரு குறிப்பிட்ட தளத்தில் தகவல்களைத் தேட Site என்பதைப் பயன்படுத்தலாம். site:wikipedia.org mother teresa  இப்போது கூகுள் wikipedia வில் மட்டும் தேடும்.
 8. cache:  குறிப்பிட்ட தளத்தின் சமீபத்திய கேட்ச்டு வெர்சனைக் (Cached Version)காட்டும். cache:apple.com
 9. ( ) ஒன்றுக்கு மேற்பட்ட தேடும் குறியீடுகளைப் பயன்படுத்தும் போது இது பயன்படும். (watch AND kerchief)-cloth  இப்போது Watch மற்றும் Kerchief என்ற இரு வார்த்தைகளும் இருக்கும் அதே சமயம் Cloth என்ற வார்த்தை இல்லாத பக்கங்களை மட்டும் தரும்.
 10. inurl:   உங்களுக்கு ஒரு தளத்தின் முழு URL தெரியவில்லை என்றால் அதில் ஒரு வார்த்தை தான் தெரியும் என்றால் இதை பயன்படுத்தலாம்.  inurl:bike என டைப் செய்தால் எந்தெந்த URL கள் bike என்ற வார்த்தையை கொண்டிருக்குமோ? அவை அனைத்தையும்  காட்டும்.                                                       intext: intext:apple இப்போது Apple என்ற வார்த்தை உள்ள பக்கத்தை காட்டும். Apple என்ற வார்த்தை அந்த பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். இதே போல் intitle: என்பதை குறிப்பிட்ட வார்த்தையை தலைப்பில் கொண்டிருக்கும் பக்கங்களைத் தேட பயன்படுத்தலாம்.
 11. allinurl:  கொடுக்கப்பட்ட அனைத்து வார்த்தைகளையும் கொண்டிருக்கும் URL களைக் காட்டும். allinurl:bike design என டைப் செய்தால் எந்தெந்த URL கள் bike, design என்ற இரண்டு வார்த்தைகளையும் கொண்டிருக்குமோ? அவற்றைக் காட்டும். அதே போல  allintext:apple steve இப்போது apple மற்றும் steve என்ற வார்த்தைகள் உள்ள பக்கங்களைக் காட்டும். apple steve என்ற வார்த்தைகள் அந்த பக்கத்தில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.
 12. கூகுள் மூலம் கணக்குகள் கூட போட முடியும். அதற்கு கூகுள் தேடலில் நேரடியாக டைப் செய்தால் போதும். உதாரணமாக 50 ஐ 10 ஆல் பெருக்க 50*10 என டைப் செய்ய வேண்டும்.
 13.  define: குறிப்பிட்ட வார்த்தையின் சரியான அகராதி பொருளை அறிய இதனைப் பயன்படுத்த வேண்டும். define:entrepreneur
 14. related: ஒத்த வலை தளங்கள் அல்லது ஒத்த விளக்கங்களை தேடுவதற்கு related: என்பதை உபயோகிக்கவும். உதாரணமாக Amazon போன்ற ஆன்லைன் ஷாப்பிங் வலை தளங்களை தேடுவதற்கு related:amazon.com எனத் தேட வேண்டும். அல்லது ஒரே மாதிரியான தகவல்களை பெற related:how to search in google என்று தேடலாம்.
 15. #..#  குறிப்பிட்ட கால இடைவெளி நிகழ்வுகளுக்கு இதனை பயன்படுத்தலாம். tamilnadu #2010..2014# என்று தேடினால் தமிழ்நாட்டை பற்றிய 2010 முதல் 2014 வரையிலான விஷயங்களைக் காட்டும்.
 16. Time, Temperature போன்ற வார்த்தைகளை குறிப்பிட்ட நகரத்தின் பெயருக்கு பின்னால் அல்லது முன்னால் சேர்ப்பதால் நேரம் மற்றும் வெப்பநிலையை அறியலாம். எடுத்துக்காட்டாக Time chennai,chennai Temperature என்று தேடலாம்.

தேடும் போது நமக்கு வேண்டிய தகவல்களை விரைவாக பெற கூகுள் இந்த அம்சங்களை நமக்கு வழங்கியுள்ளது.

 

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

136
24 shares, 136 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.