உங்கள் நேரத்தை அதிகம் இழுத்துக் கொள்வது கூகுளா? முகநூலா?

0
4
Credit : Brands

இணையத்தில் மூழ்கியிருப்பவர்கள் அதிக நேரத்தை கூகுள் தளத்தில்தான் செலவிடுகின்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பகுப்பாய்வு நிறுவனத்தைச் சேர்ந்த பிரெய்ன் வைஸர் (Brian Wieser) என்பவர் இந்த ஆய்வை நடத்தியுள்ளார். முக நூலில் அதிக நேரம் செலவிடுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்கின்ற புள்ளி விவரம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஸ்நாப்சாட் (Snapchat), ட்விட்டர் (Twitter) போன்ற சமூக ஊடகங்களில் பயனர்கள் செலவிடும் நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எதிர் மறையான கருத்துக்கள் இந்த ஊடகங்கள் வழியாகப் பரப்பப்படுவதாக பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்கள் சமூக ஊடகங்களில், குறிப்பாக முகநூலில் செலவிடும் நேரம் குறைந்து வருகிறது என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் எடுக்கப்பட்ட கணிப்பை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வின் முடிவு அமைந்துள்ளது.

இந்த ஆய்விற்காக 1994-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த 1000 நபர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 34% பேர் சமூக ஊடகத்தை விட்டு வெளியேறி விட்டதாகவும், 64% பேர் சமூக ஊடகங்களுக்கு இடைவெளி விட்டிருப்பதாகவும் கருத்துத் தெரிவித்திருந்தனர். சமூக ஊடகங்களில் ( Social network) கவனம் செலுத்துவதால் அதிக நேரம் வீணாவதாகப் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். எதிர் மறையான கருத்துக்கள் இந்த ஊடகங்கள் வழியாகப் பரப்பப்படுவதாக பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இருந்தாலும், ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் இந்த ஊடகங்களில் இருந்து தங்களைத் துண்டித்துக் கொள்ள விரும்பவில்லை. அமெரிக்காவில் வயது வந்தவர்கள் விழித்திருக்கும் நேரத்தில் பாதி நேரம் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று ஒர் ஆய்வு கூறுகிறது. டி.வி, கணிப்பொறி, வீடியோ கேம் போன்ற ஏதாவதொரு வகையில் நேரத்தைச் செலவிடுகின்றனர்.

நியூயார்க் நகரத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ஆய்வு நிறுவனமான நீல்சன் (Nielson) நிறுவனத்தின் ஆய்வுப்படி, மனிதர்கள், பல்வேறு வகையான ஊடகங்களின் முன்னே செலவிடும் நேரம் கடந்த பல ஆண்டுகளாக உச்சத்தைத் தொட்டு வருகின்றது எனத் தெரிய வருகின்றது. இதன் காரணமாகவே இணையத்தில் செலவிடும் நேரத்தைக் குறைக்கும் வகையில் பல பயன்பாட்டுச் செயலிகளை சமூக ஊடகங்கள் அறிமுகப்படுத்தி உள்ளன.

முகநூல் நிறுவனம், ‘Digital health Tools’ என்னும் பெயரில் ஒரு பயனாளர் பயன் கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் மூலம் நாம் குறித்த நேரத்தை நிர்ணயம் செய்து கொண்டு அந்த நேரத்திற்குட்பட்டு முகநூல் பதிவுகளைப் பார்வையிடலாம். குறிப்பிட்ட நேரம் வந்ததும் அது குறித்த அறிவிப்பு உங்களது திரையில் தோன்றும்.

படம் மற்றும் வீடியோக்களைப் பதிவு செய்வதற்கான இணைய தளமாகக் கருதப்படும் இன்ஸ்டாகிராம், ‘All Caught Up’ என்னும் அம்சத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. சமீபத்திய பதிவுகளைப் பார்வையிட்ட பிறகு தேவையில்லாமல் மீண்டும் ஸ்க்ரோல் செய்வதை இது தடுக்கிறது. தன்னுடைய பயனாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்குவதற்கு ஏற்பப் பல்வேறு வசதிகளை கொடுத்து வருகிறது முகநூல் நிறுவனம்.