காத்திருப்பு நேரத்தைக் குறைக்க சென்னை விமான நிலையத்தில் மின்னணு நுழைவு வாயில்

ஆவணங்களை சரி பார்க்கக் காத்திருக்காமல், காகிதங்களற்ற முறையில் பயணம் செய்ய இந்தத் தொழில்நுட்பம் உதவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


216
33 shares, 216 points

உலகம் நவீனமயமாகிக் கொண்டிருக்கிறது. எங்கும் தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் தான் கோலோச்சுகிறது. வேகம் வேகம் என வேகமெடுக்கும் மக்களுக்குத் தகுந்தவாறு அனைத்தும் மாறி வருகின்றன. அதன் படி விரைவில் விமான நிலையங்களுக்குள் பயணிகள் எளிதில் செல்லும் வகையில் மின்னணு நுழைவு வாயில்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக,சென்னை விமான நிலையத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் மின்னணு நுழைவு வாயில்கள் பொறுத்தப்பட உள்ளன. மேலும், இந்தத் தொழில்நுட்பம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

நீண்ட நேரக் காத்திருப்பு

பொதுவாக விமானப் பயணம் மேற்கொள்பவர்கள், விமான நிலையங்களுக்குள் பல்வேறு பரிசோதனைகளைத் தாண்டிச் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. அதிலும் கூட்ட நெரிசல் காரணமாக பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது .

மின்னணு முறையில் பரிசோதனை

இந்தக் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பதற்காகப் பணிகளின் வசதிக்குத் தகுந்தபடி மின்னணு முறையில் பரிசோதனை செய்யும் நுழைவு வாயில்களைப் பொருத்த தற்சமயம்
முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி விமான முனையங்களின் நுழைவுப் பகுதி, பாதுகாப்பு சோதனைப் பகுதி, விமானங்களுக்குச் செல்வதற்கான பகுதி ஆகிய இடங்களில் மின்னணு நுழைவு வாயில்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நுழைவுப்பகுதியில் விமானப் பயணச் சீட்டின் கியூஆர் கோடு (QR Code) மற்றும் பயணியின் முகம் ஆகியவை இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்கேன் செய்யப்படும். பின்பு ஏற்கனவே உள்ள தகவல்கள் தரவுகளுடன் சரிபார்க்கப்படும்.

 

டிஜி யாத்ரா

இதன் மூலம் ஆவணங்கள் ஆய்வுப் பகுதி, பாதுகாப்புப் பகுதி, விமானங்களுக்கு செல்லும் வழி ஆகியவற்றுக்குச் செல்ல அனுமதிக்கப் படுவார்கள். இதற்கு வேண்டி டிஜி யாத்ரா (Digi Yatra ) என்ற வலைதளத்தில் பதிவு செய்து, அடையாள எண்ணைப் பெற வேண்டும்
எனக் கூறப்படுகிறது.

பின்பு விமான நிலையத்திற்கு முதல் முறை செல்லும் போது, அந்த அடையாள எண்ணை வழங்க வேண்டும். மேலும், பயணியின் புகைப்படம், கண் கருவிழி மற்றும் ரேகைப் பதிவுகள் செய்யப்படும். அதன் பிறகு பயணம் மேற்கொள்ளும் பயணிகள் எந்தவொரு தாமதமும் இல்லாமல் செல்ல முடியும் என்று கூறப்படுகிறது.

 

 

முதலில் பெங்களூரு விமான நிலையத்தில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இந்தப் புதிய தொழில்நுட்பம் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக சென்னை விமானத்தில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மின்னணு நுழைவு வாயில்கள் பொருத்தப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே போல் புனே, வாரணாசி, கொல்கத்தா, விஜயவாடா விமான நிலையங்களிலும் மின்னணு நுழைவு வாயில்கள் பொருத்தப்பட உள்ளன.

எழுத்தாணியில் வீண் வதந்திகளையோ, வெறுப்பூட்டக்கூடிய பதிவுகளையோ, நடிகர்/நடிகைகள் தொடர்பான கிசுகிசுக்களையோ நாங்கள் ஒரு போதும் எழுதுவதே இல்லை. எழுத்தாணியை Facebook, Twitter -ல் பின் தொடரலாம்.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

216
33 shares, 216 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.