சிறந்த தொழில்நுட்பத்துடன் அசத்த வரும் ஒன் பிளஸ் 6T கைபேசி

0
9

இந்திய மொபைல் சந்தையில் ஒன்பிளஸ் 6 டி (onePlus 6T) ஸ்மார்ட்போன் மாடல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். பல்வேறு சிறந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளி வரும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் பல்வேறு புதிய முயற்சிகளை செய்து வருகிறது,

அதன் படி, ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள், பின்புறம் மூன்று கேமரா வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு அம்சங்கள் இதனுள் இடம்பெற்றுள்ளன என்று ஒன்பிளஸ் நிறுவனம் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போனின் விலை மட்டும் தான் சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டரி யூனிட்

சிறந்த மற்றும் நீடித்த தினசரி பயன்பாட்டிற்கான பெரிய பேட்டரி யூனிட் மூலம் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் இயக்கப்படுகிறது. ஒரு முழு நாள் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் உருவாக்ப்பட்டுள்ளது. குறிப்பாக கேம் ஆப் (Game App) போன்ற பயன்பாடுகளுக்குத்  தகுந்த படி இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனை விட அதிக பேட்டரி ஆயுள் அம்சத்துடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் டைப்-சி புல்லட் இயர் போன்

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் உடன் ஒன் பிளஸ் டைப்-சி புல்லட் இயர் போன் (Type C Bullet Earphone) வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீடித்து உழைக்கும் பயன்பாட்டுடன் இந்த சாதனம் வெளிவரும். பின்பு அரமிட் பைபர்கள் (Aramid fibre) மூலம் உருவாக்கப்பட்ட உட்கம்பிகளைக் கொண்டதால் இந்த இயர் போன் இழுக்கப்படும் பொழுது எளிதாகச் சேதம் அடையாது என ஒன்பிளஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

இந்தக் கைபேசியில் திரையிலேயே இன்பில்ட் கைரேகை சென்சார் இருக்கும் என்று ஏற்கெனவே நிறுவனம் உறுதிப்படுத்திய நிலையில், இப்போது இந்த இயர்போனும் அத்துடன் வெளியாக இருப்பதால் ஒன் பிளஸ் 6டி – இல் 3.5mm ஹெட்போன் ஜாக்-கும் நிச்சயம் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன் பிளஸ்-கூகுள் பிரத்யேகக் கூட்டு

ஒன்பிளஸ் மற்றும் கூகுள் இடையே ஒரு வித ஒத்துழைப்பு உள்ளது என்று தான் கூறவேண்டும், அதன் படி ஒன் பிளஸ் சாதனங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்குப் பெரிய முயற்சியை செயல்படுத்தி வருகிறது கூகுள் நிறுவனம். குறிப்பாக, ஒன்பிளஸ் சார்ந்த புகைப்படங்கள் அனைத்தையும் மக்களிடையே கொண்டு சேர்க்கிறது கூகுள்.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட் போனைப் பொறுத்த வரை இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு முன்பு விவோ வி9, விவோ வி11, விவோ 11 ப்ரோ போன்ற ஸ்மார்ட்போன்களில் இந்த இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தப்  புதிய தொழில்நுட்பம் மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்கள் மற்றும் புகைப்படங்களை மிகவும் பாதுகாப்பாக வைக்க முடியும்.

பெரிய டிஸ்பிளே வசதி

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்த வரை 6-இன்ச் அல்லது அதற்கும் மேற்பட்ட பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளி வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மல்டிமீடியா அனுபவத்தை வழங்கும் என்று உறுதி கொடுத்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். மேலும், எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டு இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அது கைபேசியின் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விரைவான டாஷ் சார்ஜிங்

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொதுவாக மேம்பட்ட டாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்துகிறது. மேலும், வேகமான சார்ஜ் வழங்கும் என்பதால் அனைத்து இடங்களிலும் எளிமையாகப் பயன்படுத்த முடியும்.

வெளிவந்த தகவலின் அடிப்படையில், ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 3 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு, இதன் செல்பீ கேமரா 24 எம்பி வரை இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும், எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள்.

விலை

இந்தக் கைபேசியின் விலை இந்திய விலையில் ரூபாய் 37000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.