PUBG விளையாடத் தடை – குஜராத் அரசு அதிரடி


99
20 shares, 99 points

ஸ்மார்ட் போனின் கரங்களில் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்துவிட்ட நம் தலைமுறையினர் அனைவருக்குமே PUBG (Player Unknown’s Battlegrounds) பற்றித்தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இளைஞர்களுக்கு மத்தியில் இந்த விளையாட்டு மிக பிரபலம். குறிப்பாக மாணவர்கள் இதில் அதிக நேரத்தினை செலவிடுகின்றனர்.  இதனைத்தடுக்க குஜராத் அரசு பப்ஜி விளையாட்டை தடைசெய்ய உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர்கள் போனிற்கு அடிமையாவதாகவும் மாணவர்களின் நலத்தை கருத்தில்கொண்டு இந்த விளையாட்டை தடைசெய்ய மாவட்ட நிர்வாகங்களுக்கு வலியுறுத்துவதாக அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

PUBG
Credit: gamerant

PUBG

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான இந்த விளையாட்டிற்கு உலகம் முழுவதும் பயனாளர்கள் உள்ளனர். நட்புவட்டத்தையும் தாண்டி உலகில் பப்ஜி வைத்திருக்கும் எவருடனும் நாம் விளையாடலாம். சாகச உணர்விற்காக இதில் குவியும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. தற்போது இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் இந்த விளையாட்டிற்கு தடைவிதித்து வருகின்றன. அந்த வரிசையில் குஜராத் அரசு களம் இறங்கியிருக்கிறது.

குஜராத்

குஜராத் மாநில குழந்தைகள் நல ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் பப்ஜி விளையாட்டைத் தடைசெய்யவேண்டும் என்று மாநில தொடக்கக் கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில், ’பப்ஜி விளையாட்டுத் தடை செய்யப்பட்டிருப்பதை மாவட்ட தொடக்கக் கல்வித்துறை உறுதிபடுத்தவேண்டும். பப்ஜி விளையாட்டில் குழந்தைகள் அடிமையாகியுள்ளதால், இந்தத் தடை அவசியமாகிறது. இந்த விளையாட்டு மாணவர்களின் கல்வியைப் பாதிக்கிறது’ என்று தெரிவித்துள்ளது. இந்த தடையானது இந்தியா முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்படவேண்டும் என குஜராத் குழந்தைகள் நல இயக்ககம் வலியுறுத்திவருகிறது.

playerunknowns-battlegrounds-promotion-art
Credit: gamerant

இந்த விளையாட்டு மட்டுமல்ல, பொதுவாக செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளின் உடல் மற்றும் மன ரீதியில் பாதிப்புகள் ஏற்பட அதிகம் வாய்ப்பிருக்கிறது. மிகவும் சிரமமான இந்த முயற்சியில் பெற்றோர்கள் தான் முக்கிய பங்காற்றவேண்டும். குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே போனைக் கொடுத்து பழகிவிட்டபடியால் இந்த திடீர் “யு டர்ன்” எல்லாம் கஷ்டம். அனைத்து முத்தமிடும் அதேவேளையில் குழந்தைகளை தேவையான சமயத்தில் கண்டித்தலும் அவசியமாகின்றன. ஏனெனில் இவை அவர்களுடைய எதிர்காலம் சார்ந்த விஷயம் என்பதால் கூடுதல் அக்கறையும் அவசியமாகின்றது.


Like it? Share with your friends!

99
20 shares, 99 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.