இனி இந்த போன்களில் எல்லாம் வாட்சாப் இயங்காது!!

0
50
how-to-download-whatsapp
Credit: BT. com

விண்டோஸ் போன் மற்றும் பழைய வெர்ஷன் ஆண்ட்ராய்ட் போன்களில் இனி வாட்சாப் செயலி இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

whats app

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் மற்றுமொரு படைப்பான வாட்சாப் உலகம் முழுவதும் பலகோடி மக்களை பயனர்களாகக் கொண்டுள்ளது. இந்நிலையில் விண்டோஸ் ஃபோன்களில் 2019 டிசம்பர் 31-ம் தேதி முதல் வாட்ஸ்ஆப் செயலி இயங்காது என்று வாட்சாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய வசதிகளை கொண்டுவர மற்றும் பயன்பாட்டை எளிதாக்க அனைத்து வகையான செயலிகளில் அவ்வப்போது புதிய அப்டேட்கள் வெளியிடப்படுவது வழக்கம். அடுத்த புதிய அப்டேட்டை வாட்ஸ்ஆப் நிறுவனம் ஜூன் மாதம் வெளியிட உள்ளது. அதேபோல், 2019 டிசம்பர் 31-ம் தேதிக்குப் பிறகு விண்டோஸ் போன்களில் வாட்சாப் செயலி இயங்காது. ஆனால் விண்டோஸ் கணினிகளில் இது இயங்கும்.

எனவே கணினிகளில் இயங்கும் வாட்சாப் செயலி போன்றே விண்டோஸ் போன்களுக்கும் புதிய செயலி ஒன்றினை வாட்சாப் நிறுவனம் வெளியிடும் என தகவல்கள் வெளிவருகின்றன. ஆனால் எந்த அளவிற்கு அவை உண்மை? எப்போது விண்டோஸ் போன்களுக்கான செயலி வெளிவரும் என்பது குறித்த அறிவிப்புகள் வெளிவரவில்லை.

whats app

அதுமட்டுமல்லாமல் 2020 பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் ஆண்ட்ராய்டு பதிப்பான v2.3.7 மற்றும் அதற்கு முந்தைய பதிப்புகளிலும், ஐ.ஓ.எஸ் .7 மற்றும் அதற்கு முந்தைய இயங்குதளங்களிலும் வாட்சாப் இயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்டோஸ் போன்களை உபயோகிப்பதற்கே தனியாக டிப்ளமோ படிக்கவேண்டும். அட்வான்ஸ் கோடிங் டெக்னாலஜி எல்லாம் தெரிந்திருந்தால் தான் உங்களால் புதிய காண்டாக்ட் நம்பரை போனில் பதிந்து வைத்துக்கொள்ள முடியும். மேலும் ஆண்ட்ராய்ட் போல நீங்கள் நினைக்கும் அப்ளிகேஷன்களை எல்லாம் பெற முடியாது. அதற்கு விண்டோஸ் நிறுவனம் நினைக்கவேண்டும். இப்படி ஒரு விண்டோஸ் வாசியின் கவலைகள் மிக அதிகம். இதில் வாட்சப்பின் இந்த புதிய அறிவிப்பு அவர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.