சர்க்கரை நோய் குணமாக ஆயுர்வேதம் சொல்லும் 10 வழிகள்

உண்ணும் உணவே மருந்து. நாம் அன்றாடம் உண்ணும் பொருட்களிலேயே இருக்கிறது சர்க்கரை நோய்க்கான மருந்து.


154 shares

மருத்துவம் என்பது மிகவும் அற்புதமான ஒரு துறையாகும். ஒரு உயிருக்கு மறு பிறவி கொடுப்பதற்குச் சமமானது இந்த மருத்துவம்.

நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவமாகக் கருதப்படுவது “ஆயுர்வேத மருத்துவம்” தான். இது பல நன்மைகளை உடலுக்குத் தருவதாக பல அறிஞர்களும் கூறுகின்றனர். இந்தக் கட்டுரையில் சர்க்கரை நோய்க்குத் தீர்வு தரும் ஆயுர்வேத மருந்துகளைப் பற்றிப் பார்ப்போம்.

ஆயுர்வேத முறை என்பது, நம் முன்னோர்கள் வழியாக பின்பற்றப்பட்டு வருகிறது. இது மிகவும் பிரசித்தி பெற்ற மருத்துவ முறையாகக்  கருதப்படுகின்றது. அந்தக் காலத்தில் எல்லா விதப் பிணிகளையும் ஆயுர்வேத மருத்துவ முறை மூலமாகத் தான்  குணமடையச் செய்தனர். அந்த வகையில் இது நீரிழிவு நோய்க்கும் உதவுகிறது. தற்போதைய உலகின் கொடிய நோயாகக் கருதப்படுவதைக் கூட, சரி செய்யும் ஆற்றல் இந்த மருத்துவ முறைக்கு உள்ளது.

1.மஞ்சள்

மஞ்சளில் குர்குமின் (Curcumin) என்ற வேதிப்பொருள் நிறைந்துள்ளது. கணையத்தில் உள்ள திசுவினுள் ‘மேக்ரோபேஜ்’ (Macrophage) எனும் தற்காப்பு செல்கள் நுழைந்து, ‘சைட்டோகைன்ஸ்’ என்ற அழற்சியை உருவாக்கும் புரதத்தைச் சுரப்பதால் இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் சேதமடைகின்றன. குர்குமின் இதைத் தடுத்து, இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதால், சர்க்கரைநோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

2.துளசியும், வேப்பிலையும்

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை இந்த இலைகளுக்கு உள்ளது. இவற்றின் சாற்றைக் குடித்தால் இவை அருமையான மருந்தாக மாறும். 10 வேப்பிலைக் கொழுந்து இலைகள் மற்றும் 10 துளசி இலைகள் எடுத்துக் கொண்டு நன்கு அரைத்து அவற்றின் சாற்றை மட்டும் தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு  குறையும்.

3.பாகற்காய் சாறு

சர்க்கரை நோயின் எதிரியாக கருதப்படுவது இந்த பாகற்காய் தான். ஏனெனில், இவை சர்க்கரை அளவை மிகவும் கட்டுக்கோப்பாக வைக்க உதவும். அத்துடன் ரத்தத்தை சுத்தகரித்து சுத்தமான ரத்தத்தை உடலுக்குச் செலுத்தும். பாகற்காய் சாற்றை தினமும் 30 ml குடித்து வந்தால் நல்ல பலனை அடைய முடியும்.

4.நாவல் விதைகள் மற்றும் இலைகள்

பொதுவாக இந்த நாவல் பழங்கள் நல்ல மருத்துவ குணம் கொண்டவை. அத்துடன் இவற்றின் இலைகள் மற்றும் விதைகள் கூட அற்புதத் தன்மை கொண்டவை. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதன் இலைகளை மென்று சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும். மேலும், இவற்றின் விதைகளை பொடி செய்து தினமும் 1 டீஸ்பூன் நீருடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் குணமாகும்.

5.திரிபலா

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவையே இந்த திரிபலா. இது மிகவும் முதன்மையான மருந்தாக ஆயுர்வேதத்தில் கருதப்படுகிறது. இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து உடலைச் சீராக வைக்கிறது. தினமும் இவற்றை வெது வெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

6.ஆலமரப் பட்டை

ஆலமரத்தின் பழமை மட்டுமே நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இவற்றின் பட்டையில் இருக்கும் மகத்துவம் பற்றி நமக்கு தெரியாமலே போய்விட்டது. ஆலமரப் பட்டையை 20 gm எடுத்துக் கொண்டு, 4 கிளாஸ் நீரில் கொதிக்க விடவும். பின் 1 கிளாஸ் அளவுக்கு வந்தவுடன் வடிகட்டி ஆற வைத்து குடித்து வந்தால் சர்க்கரையின் அளவு சீராகும்.

7.இலவங்க பொடி

வீட்டு மருத்துவமாகவும் ஆயுர்வேத மருத்துவமாகவும் கருதப்படும் இந்த இலவங்கம் மிகவும் எளிமையான ஒன்றாகும். இதன் மூலம் சர்க்கரை நோயை சுலபமாக குணப்படுத்த முடியும். தினமும் 3 டீஸ்பூன் இலவங்கப் பொடியை 1 லிட்டர் நீரில் கொதிக்க விட்டு வடிகட்டிக் குடித்து வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவும்.

8.நெல்லிக்காய் சாறு

அதிக மருத்துவ குணம் கொண்ட கனிகளில் ஒன்று இந்த நெல்லிக்கனி. மிகவும் பிரசித்தி பெற்ற இது, உடலின் செயல்பாட்டை சீராக வைக்க அதிகம் உதவுகிறது. தினமும் 20 ml நெல்லிச் சாற்றைக் குடித்து வந்தால் நீரிழிவு நோயிற்கு சிறந்த மருந்தாகும். மேலும், இது ரத்தத்தை சுத்தம் செய்யவும் பயன்படும்.

9.வெந்தயம்

வெந்தயம் ஒரு அருமையான மருந்தாகும். பல ஆயுர்வேத மருத்துவத்தில் வெந்தயத்தின் பயன்பாடு முதன்மையானதாகக் கருதப்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் முதல் நாள் இரவு முழுவதும் மிதமான நீரில் ஊற வைத்த வெந்தயத்தை, அடுத்த நாள் எடுத்து அரைத்து வடிகட்டிக் குடித்தால் இந்த நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம்.

10.மூலிகைக் கலவை

பொதுவாக ஒரு சில மூலிகைகளின் கலவையே சிறந்த மருந்தாக இருக்கக் கூடும். அந்த வகையில் கற்றாழை, பிரியாணி இலை, மஞ்சள் இவை மூன்றும் அருமையான மருந்தாக விளங்குகிறது. மஞ்சள் மற்றும் பிரியாணி இலைப் பொடியை 1/2 டீஸ்பூன் எடுத்து கொண்டு அவற்றுடன் 1 ஸ்பூன் கற்றாழை சேர்த்துக் கலந்து கொள்ளவும். பின் இவற்றை மதிய மற்றும் இரவு உணவு உண்ணுவதற்கு முன் சாப்பிட்டால் நல்ல பலனை அடையலாம்.


இது போன்ற பயனுள்ள பல கட்டுரைகளையும், தகவல்களையும் தெரிந்துகொள்ள எழுத்தாணியின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

154 shares
மித்ரா
தீதும் நன்றும் பிறர் தர வாரா. Spread Love Wherever You Go..!

Comments

comments

Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.