2019-ல் இந்த உலகை ஆளப்போகும் 10 கார்கள்

2019 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வர இருக்கும் சிறந்த 10 சொகுசுக்கார்கள்!!


94
20 shares, 94 points

என்னதான் விலை ராக்கெட் கணக்கில் இருந்தாலும் சொகுசுக்கார்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதற்கு அடுத்த ஆண்டும் விதிவிலக்காய் இருக்கப் போவதில்லை. 2019 ஆம் ஆண்டில் இந்த உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் பத்துக் கார்களின் பட்டியல்.

 1. 1 லம்போகினி அவெண்டேடார் எஸ்.வி.ஜே (Lamborghini Aventador SVJ)


  759 bhp பவர் மற்றும் 531lb/ft  டார்க் என அதிரடி காட்டும் லம்போகினியின் இந்த மாடல் முழுவதும் கார்பன் ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் காரின் எடை குறைவதோடு வேகமும் அதிகரிக்கும். 

  தற்போதைய தகவல்களின் படி மொத்தம் 900 லம்போகினி அவெண்டேடார் கார்களே தயாரிக்கப்பட்டுள்ளன. விலையானது 517,770 அமெரிக்க டாலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 2. 2 ஃபெராரி 488 பிஸ்தா ஸ்பைடர் (Ferrari 488 Pista Spider)


  124mph வேகத்தை வெறும் 7 நொடிகளில் கடக்கும் இந்த அசாதாரணமான கார் இத்தாலிய டிசைனர்களால் உருவாக்கப்பட்டது. 710bhp பவரினைக் கொண்ட இந்த காரினோடு கார்பன் அலாய் வீல் ஒன்றும் அளிக்கப்படுகிறது. அதன் மதிப்பு 28,000 டாலர்கள் ஆகும். காருடைய விலை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

 3. 3 ஆஸ்டன் மார்டின் டி.பி.எக்ஸ் (Aston Martin DBX)


  ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் ஆகிய நிறுவனங்களின் கார்களோடு போட்டிபோடும் வகையில் ஆஸ்டன் மார்டின் இந்தக் காரினை களம் இறக்குகிறது. 4 லிட்டர் பெட்ரோல் V8 ரக என்ஜின் மற்றும் 5.2 லிட்டர் பெட்ரோல் V12 ஆகிய இரண்டு வகைகளில் இந்த காரானது அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

 4. 4 மெக்லாரன் ஸ்பீட் டைல் (McLaren Speedtail)


  1,050bhp பவரினை உற்பத்தி செய்யக்கூடிய இந்தக் கார் 0-300kmh வேகத்தினை வெறும் 12.8 வினாடிகளில் எட்டக்கூடியது. ஹைப்ரிட் எஞ்சின் இக்காரில் பொருத்தப்பட்டுள்ளது. Hyper-GT யின் அடுத்த வெர்ஷன் போலவே இக்காரினை வெளியிட்டிருக்கிறது மெக்லாரன் நிறுவனம்.

  முன்பக்க வீல்களின் வடிவமைப்பு, மேற்பகுதி போன்றவை காற்றியக்க வடிவமைப்பில் புதியதொரு அத்தியாயத்தை இந்தக் கார் மூலம் மெக்லாரன் துவங்கியிருக்கிறது என்று சொல்லலாம். பக்கவாட்டில் கண்ணாடிகளுக்குப் பதிலாக கேமராக்கள் இருக்கின்றன. என்ஜினை ஆன் செய்வதற்கு டிரைவர் தலைக்கு மேலே பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்களை வைத்திருந்தாலும் குறைவான எண்ணிக்கையிலே கார்கள் வெளிவர இருக்கின்றன.

 5. 5 ஆடி இ - ட்ரோன் (Audi E-tron)


  முழுவதும் எலெக்ட்ரிக் காராக வெளிவர இருக்கும் இந்த ஆடி இ - ட்ரோன் SUV வகையினைச் சேர்ந்தது. காருக்கு முன்னும் பின்னும் வைக்கப்பட்டுள்ள மோட்டார் மூலம் 402bhp பவரானது உற்பத்தி செய்யப்படுகிறது. 95kWh திறனுள்ள மின்கலன் 490lb/ft டார்க்கை உற்பத்தி செய்ய வல்லது. ஒருமுறை சார்ஜ் செய்தபிறகு 248 மைல் வரை பயணிக்கலாம். 

  360 - கேமரா, பக்கவாட்டு கேமரா, ஏர் சஸ்பென்ஷன் என அட்டகாசமான வசதிகளோடு விற்பனைக்கு வருகிறது இந்த ஆடி இ - ட்ரோன்.

 6. 6 பென்ட்லி காண்டினண்டல் ஜி.டி கன்வெர்டிபில் (Bentley Continental GT Convertible)


  இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே இக்காரினைப் பற்றிய பல செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன. உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி என வடிவமைப்பில் தனது மொத்த பலத்தையும் காட்டியிருக்கிறது பென்ட்லி நிறுவனம்.

  6.0 லிட்டர் W12 எஞ்சினைக் கொண்டுள்ள இந்தக் கார் அதிகபட்சமாக 207mph வேகத்தில் செல்லக்கூடியது. ஏர் சஸ்பென்ஷன் மற்றும் கன்வெர்டிபில் ரூஃப் என கிராண்டாக வெளிவரும் இதன் விலை $214,600 ஆகும்.

 7. 7 டெஸ்லா ரோட்ஸ்டர் (Tesla Roadster)


  0-60 கிலோமீட்டர் வேகத்தை 1.9 நொடிகளில் கடக்கும் இந்த ராட்சதக் கார் அதிகபட்சமாக 250mph வரை செல்லக்கூடியது. முழுவதும் எலெக்ட்ரிக் காரான இந்த ரோட்ஸ்டர் மிதமான வேகத்தில் பயணிக்கும்போது 620 மைல் தொலைவினை கடக்கும் திறன் கொண்டதாகும். 

  டெஸ்லாவின் வரலாற்றில் பல சாதனைகளை முறியடிக்கக் காத்திருக்கும் இந்தக் காரின் விலை 200,000 டாலர்கள் ஆகும்.

 8. 8 ஜாகுவார் ஐ - பேஸ் (Jaguar I-Pace)


  எலெக்ட்ரிக் காரான இது பிரத்யேக இன்டீரியர் டிசைன்களைக் கொண்டிருக்கிறது. உள்ளே தொடுதிரைகள் மற்றும் வண்ணமயமான டேஷ்போர்டு என ஜாகுவார் சொகுசுக்காரின் எல்லா அம்சத்தையும் உள்ளே வைத்திருக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக் காரணிகளை கணக்கில் கொண்டே தயாரிக்கப்பட்ட இக்காரின் விலை 80,500 டாலர்கள் ஆகும்.

 9. 9 போர்ஷே டய்கேன் (Porsche Taycan)


  கார்பன் பைபர் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த கார் முழுவதும் எலெக்ட்ரிக் பவரினால் இயங்கக்கூடியது. ஆல் வீல் டிரைவ் வசதியினைக் கொண்டிருக்கும் இதில் இரண்டு ராட்சத மோட்டர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அதன்மூலம் 402bhp - 603bhp வரையிலான பவரினைப் பெறுவது சாத்தியமாகிறது. 

  800V திறனுள்ள மின்கலன் இதில் இடம்பெற்றிருக்கிறது. உட்புற அமைப்பைப் பொறுத்தவரை இத்தாலிய தோல்களால் செய்யப்பட பகுதிகள் கவனத்தை ஈர்க்கின்றன.

 10. 10 பி.எம்.டபிள்யு ஐ8 ரோட்ஸ்டர் (BMW i8 Roadster)

  BMW

  இரண்டு பேர் இருக்கையைக் கொண்ட இந்த ஐ8 ரோட்ஸ்டர் 2012 ஆம் ஆண்டே இதற்கான திட்டம் அந்த நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுவிட்டது. மேலே கொடுக்கப்பட்டிருக்கும் ரூப் 31mph வேகத்தினை தொட்டவுடன் மூடும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய மாடலைவிட 60 கிலோ எடை அதிகம் கொண்ட இதில் ஐவரி நிறம் தான் பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தக் காரின் விலை 148,500 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

94
20 shares, 94 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.