பணியிடங்களில் மன அழுத்தத்தைப் போக்க 10 வழிகள் !!

பணி புரியும் இடங்களில் ஏதோ ஒரு காரணத்திற்காக மன அழுத்தத்திற்கு உள்ளாகித் தவிக்கிறீர்களா? இது உங்களுக்கான பகுதி.


125
23 shares, 125 points

பொருளாதாரத் தேவைகளுக்காக பணி புரியும் நாம் ஒவ்வொருவருமே ஏதோ ஒரு தருணத்தில் பணி சார்ந்த அழுத்தத்தை உணர்ந்திருப்போம். எத்தகைய பணியாக இருந்தாலும், நீங்கள் மிகவும் விரும்பும் பணியாக இருந்தாலும் கூட அதில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் அம்சங்கள் இருக்கும். குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணியை முடிக்க வேண்டிய அழுத்தம் இருக்கும் அல்லது சவால் நிறைந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டியிருக்கும்.

ஆனால், பணி சார்ந்த அழுத்தம் நாள் பட்டதாக இருக்கும் போது அது உங்களது உடல் ஆரோக்கியத்தையும் உணர்வு ரீதியான ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். பணி சார்ந்த செயல்திறனை அதிகரித்துக்கொள்ளவும், உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியத்தை முறையாக நிர்வகிக்கவும் மன அழுத்தத்தைக் கையாளத் தெரிந்துகொள்வது அவசியம்.

இதனால் உடல்நலத்தைப் பேண எந்த அளவு அக்கறை எடுத்துக் கொள்கிறோமோ அதே அளவு மனநலத்தைப் பேணவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

மன அழுத்தத்தை நிர்வகிக்க மேற்கொள்ள வேண்டிய 10 நடவடிக்கைகள்:

1. மன அழுத்தம் ஏற்படுத்தும் சூழல்களை கண்காணிக்கவும்

எப்படிப்பட்ட சூழல்கள் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் அவற்றிற்கு எப்படி வினையாற்றுகிறீர்கள் என்பதையும் கண்டறிய வேண்டியது முக்கியம். இந்தக் குறிப்புகள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழல் எத்தகையது எனும் பாங்கினையும் உங்களது எதிர்வினையையும் தெரிந்துகொள்ள உதவும். இதைப் பற்றிய தெளிவு ஏற்பட்ட பின்னர் தான் அத்தகைய சூழலைக் கையாள்வது குறித்து சிந்திக்க முடியும்.

2. ஆரோக்கியமான எதிர்வினைகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்

துரித உணவுகள் அல்லது மதுப் பழக்கம் ஆகியவற்றின் துணையுடன் மன அழுத்தத்தைப் போக்க முயல்வதற்கு பதிலாக ஆரோக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

மன அழுத்தத்தைத் திறம்பட எதிர்த்துப் போராட நல்ல உறக்கம் அவசியம்.

மன அழுத்தத்தைக் குறைக்க உடற்பயிற்சி ஒரு சிறந்த வழியாகும். யோகா அற்புதமான தேர்வாகும். ஏதோ ஒரு வகையான உடற்பயிற்சி பலனளிக்கும். முக்கியமாக தினமும் உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கைகளுக்கு நேரம் ஒதுக்கவும். புத்தகம் படிப்பது, கச்சேரிக்குச் செல்வது, குடும்பத்தினருடன் விளையாடுவது இப்படி உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயங்களுக்கு கட்டாயம் நேரம் ஒதுக்கவும்.

மன அழுத்தத்தைத் திறம்பட எதிர்த்துப் போராட நல்ல உறக்கம் அவசியம். இரவில் கைபேசி, கணினி , தொலைக்காட்சி போன்றவற்றை அதிக நேரம் பார்ப்பதை குறைத்துக்கொள்ளவும்.

3. எல்லைகளை வகுத்துக்கொள்ளுங்கள்

ஆங்கிலத்தில் ஒரு கூற்று இருக்கிறது. “உங்கள் எல்லைகளை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். அது மிகச்சிறியதாகவோ அல்லது பிரபஞ்சம் அளவிற்குப் பெரியதாகவோ இருக்கலாம். ஆனால், நமக்கான எல்லை என்று ஒன்று இருக்க வேண்டும்.” என்பது தான் அது.

இன்றைய டிஜிட்டல் உலகில் 24 மணி நேரமும் அழுத்தத்தை சந்திக்கவேண்டிய சூழலே நிலவுகிறது. பணி வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கைக்கான எல்லைகளை நீங்களாகவே வகுத்துக்கொள்ளுங்கள். இந்த இரண்டிற்கும் இடையே தெளிவான எல்லைகளை வகுத்துக்கொண்டால் பணி வாழ்க்கை மற்றும் குடும்ப வாழ்க்கையை சமன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் அது சார்ந்த மன அழுத்தங்கள் குறையும்.

4. புத்துணர்ச்சி அடைய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்

தீவிர மன அழுத்தத்தினால் ஏற்படும் எதிர்மறை விளைவுகளைத் தவிர்க்க மன அழுத்தம் ஏற்படுவதற்கு முந்தையை நிலைக்குச் செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் தேவைப்படும். இந்த நடவடிக்கையை மேற்கொள்ள பணியிலிருந்து சற்று விலகியிருக்கவேண்டியது அவசியம். அந்த சந்தர்ப்பத்தில் பணி சார்ந்த நடவடிக்கைகள் குறித்த சிந்தனையே இல்லாமல் இருப்பது உகந்தது. எனவே தான் அவ்வப்போது பணியிலிருந்து சற்று விலகியிருப்பது முக்கியமானதாகும். கிடைக்கும் விடுமுறை நாட்கள் வீணாகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

5. ஓய்வாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

தியானம், சுவாசப் பயிற்சிகள், ஒரு குறிப்பிட்ட தருணத்தின் அனுபவங்களையும் எண்ணங்களையும் எந்தவித ஆய்விற்கும் உட்படுத்தாமல் உற்றுநோக்குதல் போன்ற நுட்பங்கள் மன அழுத்தத்தைப் போக்க உதவும். ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் ஒதுக்கி சுவாசப் பயிற்சி, நடைபயிற்சி, நல்ல உணவை ரசிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்தத் துவங்குங்கள்.

6. உங்களது மேற்பார்வையாளரிடம் பேசுங்கள்

ஆரோக்கியமான ஊழியர்களால் மட்டுமே அதிக திறனை வெளிப்படுத்த முடியும். எனவே ஊழியர்களின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையிலான பணிச் சூழலையே ஒரு நிர்வாகம் உருவாக்க விரும்பும். மேற்பார்வையாளரிடம் வெளிப்படையாக உரையாடத் துவங்குங்கள். இதில் புகார்களை பட்டியலிடக்கூடாது. உங்களது பணியை சிறப்பாக மேற்கொள்ளத் தடையாக இருக்கும், மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழல்களை நிர்வகிக்க முறையான திட்டத்தை உருவாக்குவதற்கு இந்த உரையாடலைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நேர மேலாண்மை உள்ளிட்ட பகுதிகளில் உங்களது திறன்களை மேம்படுத்த உதவும் திட்டங்களை இதன் மூலம் வடிவமைக்கலாம். உங்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். உடன் பணிபுரியும் ஊழியர்களிடமிருந்து ஆதரவைப் பெறலாம். அதிக சவால்களையும் அர்த்தமுள்ள பணிகளையும் இணைத்துக்கொண்டு உங்களது பணியை மேம்படுத்திக் கொள்ளலாம்.

7. ஆதரவைப் பெற்றுக்கொள்ளுங்கள்

நம்பத்தகுந்த நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உதவியை ஏற்றுகொள்வது மன அழுத்தத்தை நீங்கள் நிர்வகிக்கும் திறனை மேம்படுத்தும். பணி சார்ந்த மன அழுத்தம் தொடர்ந்து அதிகரிப்பதாக நீங்கள் உணர்ந்தால் உங்களது மன அழுத்தத்தை சிறப்பாக நிர்வகிக்கவும், ஆரோக்கியமற்ற வாழ்வியல் முறைகளை மாற்றிக் கொள்ளவும் உதவும் ஒரு உளவியலாளரை நீங்கள் சந்திப்பது சிறந்தது. இது தலைவலித்தால் மருத்துவரிடம் செல்வது போல தான். பெரிதாக நினைத்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

8. முன்னுரிமை அளித்து திட்டமிடுங்கள்

உங்களது பணி பற்றும் பணியிடம் சார்ந்த மன அழுத்தம் அச்சுறுத்துவதாக இருந்தால் சில எளிமையான நடைமுறைக்கேற்ற வழிகளை பின்பற்றி கட்டுப்பாட்டை திரும்பப் பெறலாம்.

People cheering at workspaceஓய்வின்றி எப்போதும் பணிபுரிந்து கொண்டே இருப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணி மற்றும் குடும்ப வாழ்க்கையை முறையாக சமன்படுத்துங்கள். சமூக நடவடிக்கைகள் மற்றும் தனித்து ஈடுபடும் நடவடிக்கைகள் ஆகியவற்றை சமன்படுத்துங்கள். அன்றாட பொறுப்புகளையும், செயல்படாத நேரத்தையும் சமன்படுத்துங்கள்.

9.பணியிடத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதில் பங்களிக்கும் தீய பழக்கங்களை விட்டுவிடுங்கள்

நம்மில் பலர் எதிர்மறையான எண்ணங்களாலும் நடத்தையினாலும் பணியிடத்தில் ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை இன்னும் மோசமாக்கி விடுகிறோம். இத்தகைய பழக்கங்களை மாற்றுவதன் மூலம் நம் மீது திணிக்கப்படும் மன அழுத்தத்தை எளிதாகக் கையாள முடியும்.

உங்களது பணி குறித்து நேர்மறையாக சிந்திக்க முயற்சியுங்கள். எதிர்மறையாக சிந்திக்கும் சக ஊழியர்களை தவிர்த்திடுங்கள்.

ஒவ்வொரு சூழலிலும் அதன் இருளான பக்கத்தில் கவனம் செலுத்தினால், நீங்கள் சக்தியை இழந்து ஊக்கமின்றி காணப்படுவீர்கள். உங்களது பணி குறித்து நேர்மறையாக சிந்திக்க முயற்சியுங்கள். எதிர்மறையாக சிந்திக்கும் சக ஊழியர்களை தவிர்த்திடுங்கள்.

சூழ்நிலையில் இருக்கும் நகைச்சுவையைக் கண்டறியுங்கள். சரியாகப் பயன்படுத்தினால் நகைச்சுவை பணியிடத்தில் இருக்கும் மன அழுத்தத்திலிருந்து விடுபட சிறந்த வழியாகும்.

10. உங்களது பணி மற்றும் உங்கள் பணியிடக் கடமைகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள்

நிச்சயமற்ற, உதவியற்ற, கட்டுப்பாட்டை இழந்தது போன்ற உணர்வுகள் நமக்கு ஏற்பட்டால் நமது மன அழுத்த அளவு அதிகமாக இருக்கும்.

அதைக் கையாள, உங்களது பணி விவரத்தை தெளிவுப்படுத்திக்கொள்ளவும். உங்களது பணி சார்ந்த கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட விவரங்களை உங்களது மேற்பார்வையாளரிடம் கேட்டுப் பெறுங்கள்.

நீண்ட நாட்களாக ஒரே மாதிரியான பணியையே தொடர்ந்து செய்துகொண்டிருந்தால் ஏதேனும் புதிய பணியை கேட்டுப்பெறுங்கள். புதிய பொறுப்புகளுடனான பணி, புதிய பகுதி, புதிய இயந்திரம் போன்றவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.


Like it? Share with your friends!

125
23 shares, 125 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.