உலகின் கைவிடப்பட்ட, திகில் நிறைந்த 10 இடங்கள்

மர்மம் நிறைந்த, கைவிடப்பட்ட, சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கு அஞ்சும் 10 இடங்கள்


120
23 shares, 120 points

வரலாற்றின் முன் பக்கங்களில் இயங்கிக்கொண்டும், மனிதர்களுக்கு வசிப்பிடமாகவும் இருந்த பல இடங்கள் இன்று சூனியமாய்க் கிடக்கின்றன. அவற்றிற்குப் பின்னால் இருக்கும் மர்மக் கதைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. ரஷியாவின் அடர் காடுகளுக்கு நடுவே இருக்கும் வீடுகள், அமெரிக்காவின் யாரும் இல்லாத தன்னந்தனித் தீவு, ஜெர்மனியில் இருக்கும் ராணுவ மருத்துவமனை போன்ற கைவிடப்பட்ட, மக்கள் செல்வதற்கு அச்சப்படும் 10 இடங்களைக் கீழே காணலாம்.

 1. 1 நீருக்குள் மூழ்கிப்போன நகரம்

  abandoned-places-Underwater-City-Shicheng-China
  Credit: EarthPorm

  சீனாவின் செஷங் மாகாணத்தில் 1959 ஆம் ஆண்டு நீர்மின் நிலையம் ஒன்று கட்டப்பட்டது. நீர்பிடிப்புப் பகுதிக்குள் இருந்த இந்த நகரத்தைக் காலி செய்துவிட்டு மக்கள் வெளியேறுமாறு அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டது. நிலையமானது பயன்பாட்டிற்கு வந்தபின்னர் ஒட்டுமொத்த நகரமும் நீருக்குள் மூழ்கிப்போனது. அவை நடந்து சுமார் 60 ஆண்டுகள் கடந்தும் இந்த இடம் அதேபோல் இருக்கிறது. ஒரு சேதமும் இல்லாமல்.

 2. 2 கோல்மான்ஸ்கோப் நமிபியா (Kolmanskop, Namibia)

  Credit: EarthPorm

  1900 களில் ஜெர்மானியர்களால் வைரங்கள் விளையும் பிரதேசமாகக் கொண்டாடப்பட்ட கோல்மான்ஸ்கோப் நகரம் பின்னாளில் பேய்களின் நகரமாக மாறிவிட்டதாக அங்கிருந்த மக்கள் புலம்புகிறார்கள். பயத்தின் காரணமாக இங்கு வசித்துவந்த மக்கள் வெளியூர்களுக்கு புலம்பெயர்ந்து விட்டனர். ஆனால் வீடுகள் அதேபோல் இன்றும் இருக்கின்றன.

 3. 3 மவுன்செல் கடல் கோட்டை , இங்கிலாந்து (The Maunsell Sea Forts, Engalnd)

  Credit: EarthPorm

  இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரம். ஹிட்லரின் நாஜிப் படைகளின் கடல் மற்றும் வான்வெளித் தாக்குதல்களைச் சமாளிக்க இங்கிலாந்தால் இக்கோட்டை கட்டப்பட்டது. போர் ஓய்ந்த பின்னர் இந்த இடத்தை அரசு கைவிட்ட பின்னர், போரில் இறந்துபோன ஆவிகள் அங்கு இருக்கின்றன என்ற கதை அங்கு குடிவந்தது.

 4. 4 ஹாலந்து தீவில் இருக்கும் வீடு, அமெரிக்கா ( Last House on Holland Island, USA)

  Credit: EarthPorm

  அமெரிக்காவின் செசாபீக் (Chesapeake) விரிகுடாவில் உள்ள ஹாலந்து தீவில் ஒரே ஒரு வீடு மட்டும் தனித்துக்கிடக்கிறது. இங்கு யார் வாழ்ந்தார்கள் என்பது பற்றிய குறிப்புகள் சரிவரக் கிடைக்கவில்லை. 2010 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இந்தவீடு கடுமையான சேதமடந்துவிட்டது.

 5. 5 பிரிப்யாட், உக்ரேன் (Pripyat, Ukraine)

  Credit: EarthPorm

  1986 ஆம் ஆண்டு இந்த நகரத்தில் ஏற்பட்ட பயங்கர அணுமின் நிலைய விபத்தினால் 15 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். 30 க்கும் அதிகமான மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அந்த கோர சம்பவத்திற்குப் பிறகு அந்நகரம் கைவிடப்பட்டது. இன்றும் அங்கே பாழடைந்த கட்டிடங்கள் இருக்கின்றன.

 6. 6 பல்கேரியாவில் உள்ள கட்டிடம் (House of the Bulgarian Communist Party, Bulgaria)

  Credit: EarthPorm

  பல்கேரியாவில் புகழ்பெற்றிருந்த கம்யுனிஸ்ட் கட்சியின் தலைமைச்செயலகக் கட்டிடம்,  1990 களின் துவக்கத்தில் சோவியத் யூனியன் சிதறியதற்குப் பின்னர் கைவிடப்பட்டது. அதன்பிறகு சுற்றுலாபயணிகளின் வருகைக்காக திறந்துவைக்கப்பட்டது. தற்போது ஆட்களின் வருகை குறைந்துவிட்டதால் பார்க்கப் பயங்கரமாக காட்சியளிக்கிறது.

 7. 7 ஓர்பியம் திரையரங்கம், அமெரிக்கா (The Orpheum Theater, Massachusetts, USA)

  Credit: EarthPorm

  1912 முதல் 1959 வரை பயன்பாட்டில் இருந்த இந்த திரையரங்கம் பின்னர் புகையிலை சேமிப்புக் கிடங்காக உபயோகிக்கப்பட்டது. தற்போது உள்ளே ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.

 8. 8 ரஷிய மர வீடுகள் (Abandoned Wooden Houses, Russia)

  Credit: EarthPorm

  ரஷியாவின் கடும் பணி பிரதேசங்களில் உள்ள காடுகளில் இந்த வீடுகள் இருக்கின்றன. பனி மற்றும் அடர் காடுகளுக்கு உள்ளே இருக்கும் இந்த வீடுகளில் யாரும் வசிப்பதில்லை. சாகச உணர்விற்காக அங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.

 9. 9 ராணுவ மருத்துவமனை, ஜெர்மனி (Abandoned Military Hospital, Beelitz, Germany)

  Credit: EarthPorm

  1800 களுக்குப் பின்னர் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை ராணுவ வீரர்களுக்காகக் கட்டப்பட்டது. இன்று மருத்துவமனையின் பகுதிகள் மனிதர்கள் நுழைய முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளன.

 10. 10 ஹாஷிமா தீவு (Hashima Island, Japan)

  Credit: EarthPorm

  கடலுக்கு அடியில் இருந்த நிலக்கரிச் சுரங்கத்தினால் புகழ்பெற்றிருந்த இந்த தீவில் ஏராளமான மக்கள் வசித்து வந்தார்கள். நிலக்கரிக்குப் பதிலாக பெட்ரோலைப் பயன்படுத்த அரசு  சட்டத்திருத்தம் கொண்டுவந்ததன் விளைவாக மக்கள் தொகையானது குறைந்துவிட்டது. தற்போதைய நிலையில் இந்தத் தீவில் யாருமே வசிக்கவில்லை.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

120
23 shares, 120 points
Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.