உலகின் மிகச்சிறந்த 10 போர் விமானங்களின் பட்டியல்!

வலிமைவாய்ந்த 10 போர் விமானங்களின் பட்டியல்!!


133
24 shares, 133 points

எப்பேர்ப்பட்ட போர்ச்சூழலையும் தனக்கு சாதகமாக மாற்றும் தன்மை ஒரு ராணுவத்தின் விமானப்படைக்கு மட்டுமே உண்டு.  உண்மையில் போரின் வெற்றியைத் தீர்மானிப்பதே  விமானப்படைதான். அப்படிப்பட்ட போர்விமானங்கள் காலப்போக்கில் நவீனமடைந்து பின்வரும் ஐந்து காரணிகளால் தத்தம் விமானப்படைக்கு வலிமை தேடித் தருகின்றன. பின்வரும் காரணிகள் ஐந்தாம் தலைமுறை விமானங்களைப் பற்றிய பிரபல அமெரிக்க ஆயுத நிறுவனம்  Lockheed Martin ன் கூற்றாகும்.

  • அனைத்து கருவிகள் மற்றும் ஆயுதங்கள் Stealth தன்மை பெற்றிருத்தல் அவசியம்.
  • எதிரி ரேடாரிலிருந்து தப்பிப்பது மற்றும் அதனை குழப்புவது.
  • உயர் ரக ஏரோடைனமிக் (Aerodynamic) வடிவமைப்பு.
  • மிகச்சிறந்த ஏவியானிக்ஸ். (Avionics என்பவை விமானத்தில் உள்ள அனைத்து மின்னணு சாதனங்களைக் குறிக்கும்)
  • அதிநவீன கணிப்பொறி மற்றும் மென்பொருள்கள்.

ஸ்டெல்த்(Stealth) ரகம்

ஸ்டெல்த் ரகமென்பவை ரேடாரிலிருந்து தப்பிப்பது ஆகும். ஆனால் ரேடாரிலிரிந்து முழுவதும் நழுவுதல் என்பது எளிமையான காரியம் அல்ல. Ferrite அல்லது multi layered graphite பெயின்டுகள் மூலம் இவை சாத்தியமாகும்.

மேற்கண்ட பண்புகளைப் பெற்றுள்ள மிகச்சிறந்த 10 போர் விமானங்களை இங்கே காணலாம். இவை இங்கே  வரிசைப்படுத்தப்படவில்லை. ஆனால் இவை இடம்பெற்றிருக்கும் ராணுவம் உலகத்தரத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும்.

Lockheed Martin F-22  Raptor

2003 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்க விமானப்படையின் முதுகெலும்பாக விளங்கிவரும் இந்த ராப்டர் மணிக்கு 2500 km/ h வேகத்தில் பறக்கக்கூடியது. ஒரு ராப்டர் மட்டுமே தன்னைச்சுற்றி 760 கிலோமீட்டரை பாதுகாக்கும்.  Laser guided வெடிகுண்டுகள் இதன் விசேஷ முட்டைகள். இதன் உண்மையான போட்டியாளர்கள்  சுகோய்-27 மற்றும் மிக்-29 மட்டுமே. தன் நேச நாடுகளுக்குக் கூட இதனை அமெரிக்கா ஏற்றுமதி செய்வதில்லை‌. நேட்டோ படைகளுக்குக் கூட.

Lockheed Martin F-22 raptor
Credit: The National Interest

Lockheed Martin F-35

அல்லது lightning ll.  இது ஒரு முழுமையான stealth  multirole aircraft ஆகும். தரைத்தாக்குதலையும் எதிரி விமானங்களையும் சேர்த்து சமாளிப்பதால் இவற்றிற்கு multirole aircraft என்று பெயர். F-35 1, F-35 B என இதற்குப்பல அவதாரங்கள் உள்ளன. முதன் முதலில் USA கப்பற்படைக்காக இவை தயாரிக்கப்பட்டன.  ஆஸி, யுகே, நார்வே, நெதர்லாந்து, கனடா, இத்தாலி மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மட்டுமே இதனைக்கொண்டு தனது வான் பரப்பை பாதுகாக்கின்றன. தற்போது வரை இருப்பதிலேயே விலை உயர்ந்த போர் விமானம் இதுதான். மதிப்பு மிக்க ஒன்று அனைவரிடமும் இருந்தால் அதற்கு ஏது மதிப்பு?

Lockheed Martin F-35
Credit: The National Interest

Sukhoi su-57

ஆயுதங்களை பொழுதுபோக்காக தயாரிக்கும் ரஷ்ய நிறுவனம் ஒன்றின் படைப்பு இது. இந்த ராஜாளிக்காக 2001 ல் உலோகங்கள் உருக ஆரம்பித்தன. முதலாவது  prototype மாடல்  வெளிவரவே 9 ஆண்டுகள் பிடித்தது.  சொல்லப்போனால் அமெரிக்காவின் ராப்டருக்காகவே பார்த்து பார்த்து வார்க்கப்பட்டது. அதிகாரப்பூர்வமாக  2019 ல்தான் தயாரிப்பே ஆரம்பிக்கப்படும் என அறிவித்தாலும்  இதனை சிரியாவில் பார்த்ததாக அமெரிக்கப் பட்சிகள் படபடக்கின்றன. இந்த ஸ்டீல்த் பறவை‌ இந்தியாவின் நிதிப்  பங்களிப்பில் உருவானது. இந்த சுகோய் 57  இன்னும் சில ஆண்டுகளில் இரண்டு பைலட்டுகள் கொண்டதாக மாற்றம் பெற்று வேறொரு பெயரில்  இந்தியப் வான்பரப்பில் வட்டமிடவுள்ளது.

Sukhoi su-57
Credit: Pinterest

Chengdu j-20

எத்தகைய வானிலை அறிவிப்பையும் பொருட்படுத்தாமல் பறக்கும் இது செங்டு நிறுவனத்தால் சீனாவுக்காக உருவாக்கப்பட்டது. மன்னிக்கவும் ராப்டருக்காகவும் சேர்த்து  உருவாக்கப்பட்டது . ரஷ்யாவின் மிக் நிறுவனத்தின் உதவியோடு உருவாக்கப்பட்ட இதுவும் ஒரு ஸ்டீல்த் ரகமாகும்‌. 2017 ல் சீன ராணுவத்தில் இணைந்த j-20 யை பலநாடுகளில் விற்பதற்கு, சீனா தன் வானில் பலமுறை பறக்கவிட்டு சீன் காட்டியது. யாரும் வாங்காவிட்டால் என்ன?  பயத்தை ஏற்படுத்தினால் சரிதான்.

chengdu-j-20_web
Credit: Aviation International News

Dassault Rafael

அறிமுகம் தேவையில்லை. ஆனால் இதன் வேகத்திற்கு  ஈடு இணை இல்லை‌. பிரெஞ்சு வன்-மென்பொருளும் , இஸ்ரேல் தற்காப்பு சாதனமும் இணைந்து இந்தியாவுக்காக தயாராகி வருகிறது. Electronic warfare, stealth, navigation, air superiority, தாக்குதலை முன்னரே கணிக்கும் early warning system என மற்ற  நவீன விமானம் போலவே இதற்கும் சிறப்புகள் ஏராளம். இதன் தாக்குதலில் இருந்து  இலக்கானது இரண்டாம் முறை  தப்பிக்க  வாய்ப்பே இல்லை. அதாவது, இலக்கிலிருந்து 10 மீட்டர் தான் அதிகப்பட்சமாக குறிதவறும். இரண்டாம் முறை இலக்கு எளிதாகிவிடும். சமீபத்திய சம்பவங்கள் மூலம் எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில் இதன் மறைக்கப்பட்ட சிறப்பம்சங்கள் இவை வந்தாலே தெரியவரும்.

அது என்ன air superiority ?

எதிரி வான்பரப்பில் பறக்கும் சக விமானங்களுக்கு வழிநடத்தும் ஒரு  தலைவன் போல. எண்ணற்ற தகவல்களை எதிரிகளிடமிருந்து சேகரித்து சகாக்களுக்கு வழங்கும் தொழில்நுட்பம் கொண்டவை. இத்தனை சிறப்புவாய்ந்த ரபேலின் விலையைக் கேட்டால் மெய்சிலிர்த்துப்போவீர்கள்….. எனவே அதைக்கூற இயலாது.

Indian Defence Update
Credit: Reddit

 Euro fighter Typhoon

வானில் விஷுவல் ரேஞ்ச் (Visual range) என்பார்கள் ஆங்கிலத்தில். அதற்குள் பறக்கும் விமானங்களே ரேடாருக்குள் புலப்படும். அதற்கு அப்பாலும் இவை பறக்க வல்லவை. அவ்வளவு உயரத்தில் பறந்தாலும் தரையில் உள்ள டாங்கிகளை நொடியில் டமாலாக்கிவிடும். இதன் வேகம் (நெருக்கமாக) மேக் நம்பர் 1 . BAE நிறுவனம் தயாரித்துள்ள இவற்றை யுகே, இத்தாலி, ஸ்பேனிஷ் எனும் மூன்று நாடுகளில்தான் மிகுதியாகக் காணலாம். இன்றுவரை ஏறத்தாழ 800 யூரோபைட்டர்கள் பிற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில் 2040 வரை இதன் தயாரிப்பு தொடரும் என BAE Systems  தெரிவித்துள்ளது. இந்தியாவும் இதற்காக ஆர்டர் கொடுத்துள்ளது.

Euro fighter Typhoon
Credit: Wallpaper Abyss – Alpha Coders
அறிந்து தெளிக!
மேக் நம்பர் (Mach number) என்பது, விமானத்தின் வேகத்திற்கும் (U), ஒலியின் வேகத்திற்கும் (C) உள்ள விகிதமாகும். ஒலியின் வேகமானது 343மீட்டர்/வினாடி. எனவே விமானத்தின் வேகம் ஒலியின் வேகத்தை நெருக்கிப்பிடிக்கும்.

Mitsubishi X-2 Shinshin

ஜப்பான். Lockheed Martin வைத்துள்ள, ஐந்தாம் தலைமுறை சித்தாந்தங்களை தூரவையுங்கள். நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஆறாம் தலைமுறை போர் விமானங்கள். அமெரிக்காவின் ராப்டரை விலைக்கு கேட்ட ஜப்பான், அமெரிக்கா மறுக்கவே இதனைத் தயாரிக்க ஆரம்பித்தது. தன்னிடம் உள்ள X-2 விமானத்தைதான் இப்படி நவீனமாக மேம்படுத்துகிறது ஜப்பான். ஆறாம் தலைமுறைக்கென வெளிப்படையான சிறப்பம்சம் ஏதுமில்லை. அத்தனையும் சீக்ரெட். குறிப்பிடும்படியாக, மிகச்சிறந்த electronic  warfare ஐ உள்ளடக்கியிருக்கும். சீனா, ரஷ்யா, Lockheed Martin  என அனைவரும் இந்த தலைமுறையில் பிசி.

Mitsubishi X-2 Shinshin

McDonnell Douglas F-15 Eagle

Air superiority க்காவே உருவாக்கப்பட்ட இவை அமெரிக்க விமானப்படை மில் 2025 வரை செயல்பாட்டில் இருக்கும். பனிப்போர் காலத்திய இவ்விமானம் இன்றைய தலைமுறை விமானங்களுக்கு தந்தை போன்றது. இவை தலைமை தாங்கி எந்த போரும் தோல்வியைடந்ததே இல்லை என்பது மயிர்கூச்சரியும் உண்மை. அமெரிக்காவைப் போல இஸ்ரேலிய விமானிகளுக்கும் இவை கட்டுப்படும். ஒரேயொரு விமானியால்  மட்டுமே இயங்கக்கூடிய இவை முழுவேகத்தில் சென்றாலும் கட்டுப்படுத்த எளியவை. இவற்றை பராமரிக்கவும் தயாரிக்கவும் அதிக செலவு பிடிப்பதால் லிமிடெட் எடிஷனிலேயே வெளிவருகிறது. சவூதி நண்பர்களுக்கு எப்பவும் சலுகை உண்டு.

McDonnell Douglas F-15 Eagle
Credit: Wikipedia

Mikoyan MIG 31 BM

ரஷ்யாவின் ஆல்டைம் பேவரட். அனைத்து போரின் போதும் கோயில் காளையாக வெளிவரும். தற்போது ஓய்வில் உள்ள இவை ஒட்டுமொத்தமாக அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. மணிக்கு 3000 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் ..சொய்ங்ங்ங்….

Mikoyan MIG 31 BM
Credit: JetPhotos
அறிந்து தெளிக!
எலக்ட்ரானிக் வார்ஃபேர் என்பது எதிரி ரேடாரை செயலிழக்க செய்யும் சக்திவாய்ந்த Radar jammer ஐக் கொண்டிருக்கும். இதன்மூலம் எதிரிக்கு தவறான சமிக்ஞை அனுப்பவும், ரேடரை திசைமாற்றி அவர்களை ஏமாற்றவும் முடியும்.

Lockheed Martin India F-21

மகிழ்ச்சியாக உணர்கிறீர்களா! உண்மைதான் பெங்களூர் விமான கண்காட்சியில் (AERO INDIA 2019)  பங்கேற்ற F-21, அனைவரின்  கவனத்தையும் ஈர்த்தது. இந்தியாவின் $15 மில்லியன் டாலர் ராணுவ நிதியின் மூலம் TATA ADVANCED SYSTEMS உடன் இணைந்து  தயாரிக்கப்படவுள்ளது. Lockheed Martin னின் முந்தைய F-22 மற்றும் F-35 யின் தொழில்நுட்பங்களை ஒருசேர கொண்டுவரவுள்ளது இந்த F-21. முன்னதாக நடைபெற்ற டென்டரின் போது தனது F16 விமானத்தை விற்க முயன்றதில் டசால்ட் ரபேலுடன் போட்டியிட்டு தோற்றது. டென்டரைக் கைப்பெற்ற தனது டெக்ஸாஸ் தொழிற்சாலையையே இந்தியாவுக்கு கொண்டு சலுகை தர முன்வந்தபோதும் தோல்விதான். முற்றிலும் இந்திய விமானப்படையின் தேவைக்காக மட்டும் (முழுவதும்)“மேக் இன் இந்தியா”  வாகவே தயாரிக்கப்படவுள்ளது .  மே மாத இறுதியில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.

Lockheed Martin India F-21 pic
Credit: The Economic Times

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.


Like it? Share with your friends!

133
24 shares, 133 points
nagarajan

Choose A Format
Story
Formatted Text with Embeds and Visuals
Trivia quiz
Series of questions with right and wrong answers that intends to check knowledge
List
The Classic Internet Listicles
Ranked List
Upvote or downvote to decide the best list item
Countdown
The Classic Internet Countdowns
Open List
Submit your own item and vote up for the best submission

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Join 100's of Free Subscribers list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.