ஃபனி புயலில் இருந்து மரங்களைக் காப்பாற்றுவது எப்படி?

0
11
CycloneGaja_CoconutTree_

இந்தியப்பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று தாழ்வு மண்டலமாக மாறுகிறது. இது புயலாக மாறி வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. காற்றின் வேகம் 115 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கும் என்பதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

 

CycloneGaja_CoconutTree_ஏற்கனவே வந்த கஜாவின் பாதிப்பு அகலாத வேளையில் இப்போது வரவிருக்கும் ஃபனி எம்மாதிரியான சேதங்களை ஏற்படுத்தும் என்ற பயம் கடலோர மாவட்டங்களில் உள்ள மக்களை கலங்கடிக்கிறது. இந்நிலையில் இந்த புயல் காற்றில் இருந்து மரங்களைப் பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வேளாண்துறை நிபுணர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அவை பற்றிப் பார்ப்போம்.

தென்னை

தென்னை மரங்களைப் பொறுத்தவரை மகசூல் தரும் தென்னை மரங்களில் தலை பாகத்தில் தேங்காய், இளநீர், பச்சை ஓலை, காய்ந்த ஓலை போன்றவை அதிகம் இருந்தால் காற்றின் வேகத்தினால் மரம் முழுவதும் அடியோடு சாய்வதற்கோ, முறிந்து விழுவதற்கோ வழிவகுக்கும். எனவே, இளம் ஓலைகளைத் தவிர்த்து, மீதமுள்ள பச்சை மற்றும் காய்ந்த மட்டைகள், இளநீர், தேங்காய் போன்றவற்றை வெட்டி அகற்றி விடுவது நல்லது. இதனால், மரம் காற்று வேகத்தை தாங்கி நிற்கும் வாய்ப்புகள் அதிகம்.

TREE CYCLONEபுயல், மழை போன்றவற்றை எதிர்கொள்ளவிருக்கும் நான்கு நாட்களுக்கு முன்பு விவசாயிகள் தென்னந்தோப்புகளுக்கு நீர்ப் பாய்ச்சுவதை நிறுத்திவிட வேண்டும். இதனால், தென்னையின் வேர்ப்பகுதி மண்ணில் நன்றாக இறுகி மரம் சாய்ந்துவிடாமல் பாதுகாக்க உதவியாக இருக்கும்.

தோட்டக்கலைப் பயிர்கள்

  • காற்று வீசும் சமயம், காற்று மரங்களின் ஊடே புகுந்து செல்லும் வகையில், பக்கவாட்டுக் கிளைகளையும் அதிகப்படியான இலைகளையும் கவாத்து செய்து, மரம் வேரோடு சாய்ந்து விடுவதை தடுக்கலாம். கவாத்து செய்த இடங்களில் பூஞ்சாண நோய் பரவாமல் தடுக்க காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஒரு லிட்டர் நீரில் 300 கிராம் கலந்த கலவை கொண்டு பூச வேண்டும்.
  • தோப்புகளுக்கு நீர் பாய்ச்சுவதை இரண்டு நாட்களுக்கு முன்பே நிறுத்திவிடுவதன் மூலம் வேர்ப்பகுதி இறுகி மரம் காற்றில் சாயாமல் தடுக்கலாம்.
  • உரமிடுதல் போன்ற பணிகளுக்காக மரத்தை சுற்றி பாத்தி கட்டுதல் போன்ற பணிகளை தற்சமயம் மேற்கொள்ளாமல், கன மழை மற்றும் காற்று கடந்த பின் மேற்கொள்வது சிறந்தது.
  • வாழைத் தோப்பினைச் சுற்றி வாய்க்கால் எடுத்து மழைநீர் தேங்காமல் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.
  • நெல், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, நிலக்கடலை போன்ற பயிர்களுக்கு வயல்களில் மழை நீர் தேங்கியிருந்தால், தண்ணீரை வடித்து வடிகால் வசதியினை நன்றாக ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

coconut-Gaja- TREE FELLவயல் மற்றும் தோப்பில் மழைநீர் வழிந்து செல்வதற்கான வாய்க்கால்களை தூர்வாரி வைத்துக்கொள்வது நல்லது. வயல்/தோப்பிற்கு வெளியே குழிகளை வெட்டியும் அல்லது கிணற்றிலும் இந்த மழைநீர் சென்று சேர வழிவகை செய்ய வேண்டும். இதனால் எதிர்வரும் கோடைகாலத்தை தண்ணீர் பஞ்சமின்றி சமாளிக்க முடியும் என்கிறார்கள் நிபுணர்கள்.