நெருங்கும் ஃபனி புயல் – தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்!!

0
89
23-04-2019-Fani-600
Credit: Skymet Weather

இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் இது புயலாக மாறி 30ம் தேதி தமிழக கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலிற்கு ஃபனி என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயரை வங்கதேசம் அளித்திருக்கிறது. ஃபனி என்பது உருதுச் சொல் இதற்கு ஆபத்தான, பிரம்மாண்டமான என்னும் பொருள் கொள்ளப்படுகிறது.

23-04-2019-Fani-600
Credit: Skymet Weather

ஃபனி

இந்தியப்பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அதன் பின்னர் புயலாக மையம் கொள்கிறது. இதனால் 28,29 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தென் தமிழகத்தில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் 25, 26 ஆகிய தேதிகளில் தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளுக்கும் 27, 28 ஆகிய தேதிகளில் தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

fani.
Credit: Kerala Kaumudi Online

இந்நிலையில் ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில், கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக  இந்த இரு தேதிகளுக்கு தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

சித்திரையில் வரும் புயல் ஆபத்தானதா?

பொதுவாக சித்திர மாதம் தமிழகத்தில் புயல்கள் வருவதற்கு வாய்ப்புகள் மிக குறைவு. ஆனால் அப்படி ஒரு புயல் உருவாகும் பட்சத்தில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. கடந்த 1979 ஆம் ஆண்டு மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் சித்திரை மாதம் வீசிய புயல்கள் ஏற்படுத்திய சேதம் பயங்கரமானவை. இதனால் இந்த ஆண்டும் பலத்த மழை மற்றும் காற்று இருக்கலாம் என்கிறார்கள் வல்லுனர்கள்.

ரெட் அலெர்ட்

வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு அறிவிக்கும் எச்சரிக்கைகள் தான் இந்த அலர்ட்கள். பொதுவாக நான்கு வித்தியசமான அலர்ட்கள் நான்கு விதமான காலநிலைகளை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அவைகள் பொதுவாக பச்சை எச்சரிக்கை (Green Alert), மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert), அம்பர் அல்லது ஆரஞ்ச் எச்சரிக்கை (Amber Alert), மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) ஆகும்.

cyclonesபச்சை எச்சரிக்கை

பொதுவாக மழை பெய்யும் அறிகுறி வானில் தென்பட்டாலே இந்த எச்சரிக்கை விடப்படும். இதனால் மக்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை.

மஞ்சள் எச்சரிக்கை

வானிலை மிகவும் மோசமாக இருப்பதை தெரிவிப்பதே இந்த மஞ்சள் எச்சரிக்கை ஆகும். இது போன்ற நேரங்களில் மக்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தயார் நிலையில் வைத்துக் கொள்வது நல்லது.

அம்பர் எச்சரிக்கை

பொருட்சேதம் அல்லது உயிர்ச் சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு வானிலை மோசமாக இருக்கும் பட்சத்தில் வானிலை ஆய்வு மையம் இந்த எச்சரிக்கையைத் தரும். இது போன்ற நேரங்களில் மக்கள் பயணங்களை தவிர்ப்பது  நலம்.

சிவப்பு எச்சரிக்கை

மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையிலும், அடிப்படை தேவைகளை அடைய முடியாத நிலை ஏற்படும் வகையில் மழைப் பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போதே இந்த எச்சரிக்கை அளிக்கப்படும். போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படும் வகையில் மழை பெய்யும் போது தான் இது போன்ற எச்சரிக்கைகள் விடப்படும்.